2008-03-28

இசையின் மழையில் நனைந்திடும் நேரம்

வரிகள் - அப்துல்ஹமீத் (இறைதாசன்)
இசை - பயாஸ், இரட்ணம்
குரல் - பொன் சுபாஸ்சந்திரன்



இயற்கையின் ஒவ்வொரு அசைவும் கண்ணுக்கு மட்டும் அழகைத் தராமல், அதனால் எழும் ஓசைகள் சுருதியும், லயமும் கலந்த இனிய இசையாகி மனங்களை எப்படி மகிழ்விக்கின்றது என்பதைச் சொல்லும் ´இசையின் மழையில் நனைந்திடும் நேரம் இதயங்கள் யாவும் இணைந்தொன்று சேரும்...´ என்ற பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பேன். எனக்குத் தெரிந்த வரையில் இப்பாடலுக்கு பயாஸ், இரட்ணம் இருவரும் இணைந்து இசையமைக்கப் பொன் சுபாஸ் சந்திரன் அவர்கள் தனது அருமையான குரலைக் கொடுத்திருந்தார்.

பாஷை, நிறம், மதம், சாதி, உயர்வு, தாழ்வு.. என்று எல்லாமே மண்டியிட்டு அமர்ந்து விட, எந்த பேதமுமின்றி மனங்களை இணைக்கும் இப்பாடலை எழுதிய இறைதாசன் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. பாடல் வரிகளில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களை மட்டும் அடிக்கடி எண்ணிப் பார்த்திருக்கிறேன்.

இது விடயத்தில் மிகவும் தன்னடக்கமாக இருந்த இறைதாசன் என்ற கவிஞர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் எனது அபிமான அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்ஹமீத்தான் என்பதை திரு.எஸ்.கே.ராஜென் அவர்கள் ஐபிசியின் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்திய போதுதான் அறிந்து கொண்டேன்

பட்டு மாமியே உன் சிட்டு மகளெங்கே?

இசை - கல்முனை எஸ்.சிவா
பாடியவர்கள் - A.E.மனோகரன் + நிலக்சி வீரசிங்கம்

2008-01-09

யாழ் நகர வீதியில் நாம்

இலங்கைக் கலைஞர் வி.கே.ஜே.மதியின்
யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்

பாடலைக் கேட்க...

யாழ் நகரவீதியில் நாம்
சுற்றித் திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று

காற்று வாங்கிய நேரங்கள்

நல்லூர்க்கந்தன் வீதியில்
நாம் கம்பன்கழகம் பார்த்ததும்
ராஜாத்தியட்டர் அரங்கிலே
களவாய் சினிமா பார்த்ததும்
லேடிஸ் கோலிஜ் சுண்டிக்குளி
வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளில் சுற்றியது
என் நெஞ்சில் சுற்றுதடா (2)

சட்டநாதர் கோயிலில்
அருணா கோஷ்டி பார்ப்பதும்
இளங்கலைஞர் மன்றத்தில்
அரங்கேற்றம் பார்த்ததும்
சின்னமணி வில்லிசை
சின்னவயசில் பார்த்ததும்
மாவிட்டபுரம் கோயிலில்
மாவிளக்கு போட்டதும்

கீரிமலைக் கடலிலே
நீச்சல் பழகப் போனதும்
கச்சான் கடை ஆச்சியோடு
சண்டைபிடித்து ஓடியதும் (2)
தட்டிவானில் ஏறி
சந்நிதி கோயில் போனதும்
அன்னதான மண்டபத்தில்
வரிசையாக நின்றதும்

பன்றித்தலைச்சி அம்மன் கோயில்
பங்குனித் திங்கள் பொங்கலும்
வல்லிபுரக் கோயிலின்
நாமம் அள்ளிப் பூசியதும்
நாகர் கோவில் மண்ல்காடு
சவுக்கங் காட்டுத்தோப்பெல்லாம்
கப்பல் திருவிழா பார்த்தது
என் நெஞ்சில் நிக்குதடா (2)

துர்க்கை அம்மன் கோயிலில்
பிரதட்டை அடித்ததும்
மாரி அம்மன் கோயிலில்
தீவெட்டி பிடித்தததும்
சுட்டிபுரம் அம்மன் கோயில்
சீர்காழி கச்சேரியும்
நயினை அம்மன் கோயிலுக்கு
வள்ளத்தில் போனதும்

விக்னா டியூஷன் போனதும்
Science Hall இல் படித்ததும்
நேற்றுப் போல தெரியுது
இது வாழ்வில் மறக்குமா (2)
பள்ளிக்கூடம் போகாமல்
Big Match பார்க்கப்போனதும்
வாத்தியாரைக் கண்டதும்
கூட்டத்திலே மறைந்ததும் (2)

யாழ்நகர வீதியில் நாம்
சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று

காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர்க்கந்தன் வீதியில் நாம்
கம்பன் கழகம் பார்த்ததும்
கைலாசபதி கலையரங்கில
Colors Night பார்த்ததும்

லேடிஸ் கோலிஜ் சுண்டிக்குளி
வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளிலே சுற்றியது
என் நெஞ்சில் சுற்றுதடா (2)

யாழ்நகர வீதியில் நாம்
சுற்றித் திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று . . . . . .
காற்று வாங்கிய நேரங்கள் . . . . . .


Quelle - Mayavin Kalagnarkal

2006-12-27

நம் தேசக்குரலே

பாடலுக்கான இசை - சந்தோஷ்
பாடியவர் - கஜன்
பாடலை எழுதியவர் - எல்லாளன் (U.K)


நம் தேசக்குரலே கலைந்தனையோ
நாம் தேம்பி அழநீ தொலைந்தனையோ
மறைந்தனையோ
விடுதலை விருப்போடு விரைந்தவனே
தடைவந்ததோ துயர்தந்ததோ உனைத்தின்றதோ
மதியைச் சொன்ன மனிதா நீயும்
மெழுகாய் உருகினையோ

இதயம் அழுகிறதே - எங்கள்
விழிகள் கசிகிறதே - ஐயா
விழிநீர் வருகையின் வேகம் தாங்கா
விழிகள் தேய்கிறதே -2

விடுதலை விடிவெள்ளி விரைகிறதோ
ஐயோ மறைகிறதோ தொலைகிறதோ

இதயத்தில் இடிதந்து விடைபெறுதோ
தயவுமில்லை தாங்கவில்லை தாளவில்லை
இதயம் அழுகிறதே - எங்கள்
விழிகள் கசிகிறதே - ஐயா
விழிநீர் வருகையின் வேகம் தாங்கா
விழிகள் தேய்கிறதே -2

சரித்திரம் ஆனவர்கள் சரிவதில்லை
என்றும் அழிவதில்லை அகல்வதில்லை
மக்கள்மனம் என்றும்நின்று மறைவதில்லை
மறந்தேவிடோம் நினைந்திடுவோம்
தொடர்ந்திடுவோம்
இதயம் அழுகிறதே - எங்கள்
விழிகள் கசிகிறதே - ஐயா
விழிநீர் வருகையின் வேகம் தாங்கா
விழிகள் தேய்கிறதே -2

2006-12-12

மண்ணோடு உன் ஊர்வலம்

பாடல் வரிகள் - வைரமுத்து சொர்ணலிங்கம்
பாடியவர் - நடா ஜெயதேவன்
இசை - கிரிதரன் குணரட்ணம்


மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்

மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மானந்தான் பெரிதென்று வாழ்ந்திடும்
தேசத்தின் புயலென்று ஓய்ந்திடும்

மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மண்ணோடு…


வாழும் பிள்ளை பாடையிலே போவதோ
நாடும் சுடுகாடு என்றே ஆவதோ
பாழும் விதிதானே என்று எண்ணவோ
வீழும் மக்கள் நெஞ்சங்களில் துஞ்சவோ

அஞ்சி அஞ்சி வாழ்வதுதான் நம் வாழ்க்கையா
மிஞ்சி அவர் துயர் தீர்க்க சேரடா
வெண்பஞ்சும் ஒன்றிணைந்தால் கயிறாகும்
ஒன்றிணைந்தால் எம் வாழ்வும் உயர்வாகும்

மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மண்ணோடு…


தேசம் உந்தன் பாசம் என்று ஆனதோ
வாசம் செய்ய மோசம் வந்து சேர்ந்ததோ
காலம் செய்த கோலம் என்று எண்ணவோ
காலன் செயல் ஈனம் என்று சொல்வதோ

பாவம் ஈழத் தமிழனாகப் பிறந்ததா
வேகும் தணல் மேல் விழுந்த புழுக்களாய்
வெரறுந்த மரமாகிப் போவதேன்
விழுதுடனே தளைத்தோங்கி வாழாமல்

மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மண்ணோடு…

2006-09-02

விடை சொல் கண்ணே சிறகா சிறையா

Album - Singles
பாடல் வரிகள் - சுஜீத்.ஜீ
இசை - சந்தோஷ்

விடை சொல் கண்ணே சிறகா சிறையா
பதில் சொல் பெண்ணே வரமா வலியா


புயல் வந்து ஓய்ந்து போகும்
மழை வந்து காய்ந்து போகும்
எதுவேதான் வந்து போயினும் காதல் அழியாதே
புதிர்போடும் உன்தன் பெண்மை
புரியாதோ என்றும் உண்மை
பலியாக அடியே பெண்ணே என்னைக் கொல்லாதே

நதி சேரும் கடலின் மேலே
உருவாகும் துளியைப் போலே
அன்பே நான் உன்னைச் சேர
துடிதுடியாய் துடித்தேன் அழகே

வண்ணாத்திப் பூச்சி மேலே
சேர்ந்துள்ள ரேகைபோலே
அறியாத விதியை நானும்
எண்ணி எண்ணித் தவித்தேன் அழகே
அன்பே நீ தென்றல் போலே
விதிசொல்லும் ரேகை மேலே
உள்ளோடும் உண்மை தன்னை
சொன்னால் நீயும் பிழைப்பேன் அழகே

நில் நில் என்தன் அன்பே
நான் நான் உன்னைச் சேரும்
நாள் நாள் வருமா என்று

விடை சொல் கண்ணே சிறகா சிறையா
பதில் சொல் பெண்ணே வரமா வலியா


எதுவேதான் வந்துபோயினும்
எதுவேதான் சென்றுபோயினும்
அழியாத காதல் உன்மேல் அன்பே நில்லாதே
தலை சூடும் மல்லிப் பூவை
கலைப்பாளே வண்ணப் பாவை
அதுபோலே என்னை நீயும் கீழே தள்ளாதே

அழகான பூமியோடே
சேர்ந்தோடும் நிலவைப் போலே
உயிரே உன் உள்ளம் சேர
தவிதவியாய்த் தவித்தேன் உயிரே

நீண்டோடும் வானத்தோடே
அளவில்லா விண்மீன் போலே
புரியாத உன்தன் உள்ளம்
அறிய அறிய தவித்தேன் அழகே
அதிகாலை சூரியன் வந்து
ஒரு சேர்க்கும் ஒளியைப் போலே
தெளிவான அன்பைத் தந்தால்
அதனை நானும் ருசிப்பேன் அழகே

வா வா என்தன் அன்பே
நான் நான் உன்னைச் சேரும்
நாள் நாள் வருமா என்று

நடைபோடும் பெண்ணே புரியாத புதிர்தானா
விடைதன்னை நானும் அறிவேனா அறிவேனா.

2006-08-21

வாழ்வும் வரும் சாவும் வரும் ஏதோ ஒருநாள்...

பாடல் - விடுதலை
பாடல் வரிகள் - சுஜீத்.ஜீ
இசை - சந்தோஷ்
பாடல் காட்சியில் - சுஜீத்.ஜீ + சந்தோஷ்



சுஜீத்.ஜீ

வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒருநாள் விடிவும் வரும்
கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு

நாளைய நாளில் வரமாய் வரும்

வீதியிலே நடக்கிறேன் விதியை நினைக்கிறேன்
தமிழனாய்ப் பிறந்து நான் தினமும் தவிக்கிறேன்
எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை
எங்கள் மண்ணில் ஏது இல்லை இருந்தும் ஏதும் இல்லை
தினம் தினம் உயிர்க்கொலை உயிர்க்கு மதிப்பில்லை
இன்று இருப்பவர் நாளை இறப்பார் தெரியவில்லை
நாட்டை எண்ணித் துடிக்கிறேன் மனதில் வெடிக்கிறேன்
இன்ரநெற்ரை திறக்கிறேன் செய்திகள் படிக்கிறேன்
முழுவதும் வதை கொலை இல்லையா விடுதலை
மேற்குலகை நினைக்கையில் வளர்வை வியக்கிறேன்
தாயகத்தை நினைக்கையில் உள்ளே நான் அழுகிறேன்
விடுதலை விடுதலை என்றுதான் விடுதலை
தமிழ் வாழ நாடு இல்லை அவர்க்கு நாடு இல்லை
அரசியல் பேசவில்லை அவ்வறி வெனக்கில்லை
மனிதனாய்ப் பேசுகிறேன் கண்ணீரை வீசுகிறேன்
எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை


வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒருநாள் விடிவும் வரும்
கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு

நாளைய நாளில் வரமாய் வரும்

போர் வந்தாக் கிடைக்குமே விடுதலை - சும்மா
வாயைப் பிளந்திருந்து பயனில்ல - நாங்க
ஆழப் பிறந்தவர்கள் மறக்கல்ல - நெஞ்சில்
கோழைத் தனத்தோட நாம் பிறக்கல்ல - அந்த
போரை விரும்பி நாங்க அழைக்கல்ல - முடிவு
போரில் வந்தா அதைத் தடுக்கல்ல - எமக்கு
வேணும் எப்படியோ விடுதலை - அதை
தேடி எடுத்த பின்தான் மறுவேல ஏய்...

வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒருநாள் விடிவும் வரும்
கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு

நாளைய நாளில் வரமாய் வரும்

அமைதி அழிந்து போனதால் துடிக்கிறேன் - எங்கே
தேடிச்சென்று பெறலாமோ தவிக்கிறேன்
ஊரெல்லாம் போரினால மூடப்பட்டுக் கிடக்குது - தினமும்
அங்கே இங்கே அழிவுகள் நடக்குது - நாங்க
காத்திருந்தா இனியில்லை விடுதலை - வெறியர்க்
கிரையாவோம் அதுதானா இனிநிலை - ஒளிந்து
ஒடிச்செல்ல புலி ஒண்டும் எலி இல்லை
தமிழ் ஈழம் வெல்வோம் அதுதானே விடுதலை


வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒருநாள் விடிவும் வரும்
கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு

நாளைய நாளில் வரமாய் வரும்