2003-12-03

பெற்ற மனம் பித்து என்பார்

பெற்ற மனம் பித்து என்பார் - அவர்
பிள்ளை மனம் கல்லு என்பார்!
அத்தனையும் உண்மையென்பார் - சிலர்
ஆண்டவனின் செய்கை என்பார்!

பெற்றவரும் அந்நாளில்
பிள்ளைகள்தானே - மனம்
பித்தாகிப் போகு முன்னே
கல்லுகள்தானே!
பிள்ளைகளும் பின்னாளில்
பெற்றாராகலாம் - அவர்
கல்லான மனங்களெல்லாம்
பித்தாய் மாறலாம்!

அம்மா அப்பா ஆனபின்தான்
அனுபவம் விளங்கும் - பெற்ற
அன்னை தந்தை செய்வதெல்லாம்
அறிவுக்குத் துலங்கும்!
சும்மா சொன்னாப் புரிவதில்லை
இந்தத் தத்துவம் - இதை
சொல்லாமலே புரிய வைக்கும்
வாழ்க்கைத் தத்துவம்.

வரிகள் - அமரர் ஈழத்து ரத்தினம்.
இசை - மோகன்ராஜ்
பாடியவர் - கே.எஸ்.பாலச்சந்திரன்.