2004-10-20

சந்தன மேடை என் இதயத்திலே

ஈழத்தில் மெல்லிசையின் பங்குக்கு அத்திவாரமான மூத்த கலைஞர்களில் ஒருவரான சங்கீதபூஷணம் எம்.ஏ.குலசீலநாதன், தன் வளமான குரலால் பாடி பலரது மனமேடைகளில் இடம் பிடித்துக் கொண்ட பாடல்களில் ஒன்று இது.

இப்பாடலை அமரர் - சங்கீதபூஷணம் எம்.ஏ.குலசீலநாதன் அவர்கள்,
அமரர் எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியுள்ளார்.
பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரன் என் சண்முகலிங்கம்.
இசையமைத்தவரும் சங்கீதபூஷணம் எம்.ஏ.குலசீலநாதன் அவர்களே.



சந்தன மேடை என் இதயத்திலே
உன் சதங்கையின் நாதந்தான் கேக்குதடி
மந்திரமில்லாத மயக்கமடி
வண்ண மாமயில் நீயெம் தேவியடி

பாட்டுக்கு ஆடிடும் பாவைதான்
அவள் பாபம் எல்லாம் புதுமை ராகந்தான்
மானுடத்தின் குரல் ஒன்றுதான்
அவள் மனதை மயக்கியது உண்மைதான்

கானத்தில் கனிந்தவள் வந்திடுவாள்
இங்கு கண்டறியா இன்பம் தந்திடுவாள்
வானத்தில் ஒளிரும் நட்சத்திரமாய்
எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டி நின்றிடுவாள்.

சந்தன மேடை என் இதயத்திலே
உன் சதங்கையின் நாதந்தான் கேக்குதடி
மந்திரமில்லாத மயக்கமடி
வண்ண மாமயில் நீயெம் தேவியடி

3 Kommentare:

-/பெயரிலி. hat gesagt…

சந்திரவதனா நன்றி நன்றி நன்றி நன்றி. இதன் ஒலிவடிவத்தை பத்தாண்டுகளாகத் தேடித்திரிகிறேன். எங்காவது கிடைக்குமா?

Chandravathanaa hat gesagt…

வணக்கம் இரமணீதரன்

இதை இன்று இங்கு பதியும் முன்னர் நானும் தேடிகளில் தேடிப் பார்த்தேன். எங்கும் ஒலி வடிவமோ அன்றி சங்கீதபூசணம் பற்றிய விபரமோ கிடைக்கவில்லை. இறுதியில் எஞ்சியது கணினிக்குள் அறியப் படாமலே போய் விட்டாரோ என்ற மெலிதான கவலை மட்டுமே.

எப்போதாவது இதன் ஒலி வடிவம் கிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா

மு.மயூரன் hat gesagt…

இங்கே இந்தப்பாடலைக்கேட்கலாம்