பாடியவர்-
இசை-சுந்தர்
வரிகள்- சஞ்சீவ்காந்த்(இளைஞன்)
அன்புள்ள தாயகமே...
அன்புள்ள தாயகமே...
நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம்தானா?
எழுதுகின்றேன்
கண்ணீர் நனைக்கின்றதே !
ஏர் பிடித்த கைகளிலே
போர் கொடுத்த ஆயுதமோ
நேர் நிமிர்ந்த மார்பினிலே
யார் பதித்த குண்டுகளோ
நான் நடந்த தெருவினிலும்
வான் அளந்த வடக்கினிலும்
ஏன் இந்த சோதனையோ
என் மனசில் வேதனையே
நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம்தானா?
ஆராரோ தாய் படிக்க
ஏணையும் அசைகிறதா
ஊரெலாம் ஓலம் தானா
உறவுகளும் அழுகிறதோ
உடல் மடியும் முன்னாலுன்
திருவடி நான் அடைவேனோ
உயிர் சென்ற பின்னா(லும்) (நீ)
ஆறடி நிலம் தருவாயோ
நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம்தானா?
எழுதுகின்றேன்
கண்ணீர் நனைக்கின்றதே !
நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம்தானா?
பாடலாக்கப் பட்ட போது கவிதையின் சில வரிகள் விடுபட்டு விட்டன.
கீழே சஞ்சீவ்காந்தின்(இளைஞன்) முழுமையான கவிதை-
அன்புள்ள தாயகமே...
ஆசைமகன் எழுதும் மடல்
நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம்தானா?
எழுத மனம் நினைக்கிறதே
கண்ணீர் அதை நனைக்கிறதே !
எண்ணத்தின் தோற்றமெலாம்
கன்னத்தில்; தெரி;கிறதே
ஏக்கத்தின் முழு உருவம்
என் உதட்டில் தவழ்கிறதே
சிந்தனையும் சிரிக்கிறதே
சித்திரையும் அழைக்கிறதே
எத்தனை நாள் ஆகியதோ
உன் மடியில் நானுறங்கி
அன்புள்ள தாயகமே...
ஆசைமகன் எழுதும் மடல்
ஏர் பிடித்த கைகளிலே
போர் கொடுத்த ஆயுதமோ
நேர் நிமிர்ந்த மார்பினிலே
யார் பதித்த குண்டுகளோ
நான் நடந்த தெருவினிலும்
வான் அளந்த வடக்கினிலும்
ஏன் இந்த சோதனையோ
என் மனசில் வேதனையே
அன்புள்ள தாயகமே...
ஆசைமகன் எழுதும் மடல்
நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம்தானா
கேட்க நா துடிக்கிறது
சோகம் அதை தடுக்கிறதே !
மான் குட்டி விளையாடும்
அந்திப்; பொழுதும் நலம்தானா
என் வீட்டுத் தோட்டத்தில்
ப10த்த கொடி நலம்தானா
நில்லாமல் ஓடி வரும்
நிலவொளியும் காண்பீரோ
சொல்லாமல் பாடல் தரும்
குயிலோசை கேட்பீரோ
அன்புள்ள தாயகமே...
ஆசைமகன் எழுதும் மடல்
ஆராரோ கீதம் படிக்க
ஏணையும் அசைகின்றதா
ஊரெல்லாம் ஓலம் ஒலிக்க
உறவுகளும் அழுகின்றதோ
உடல் மடியும் முன்னாலே
திருவடியை அடைவேனோ
உயிர் பிரிந்த பின்னாலும்
ஆறடி நிலம் உண்டோ
அன்புள்ள தாயகமே...
ஆசைமகன் எழுதும் மடல்
நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம்தானா
எழுத மனம் நினைக்கிறதே
கண்ணீர் அதை நனைக்கிறதே !
அன்புள்ள தாயகமே...
ஆசைமகன் எழுதும் மடல் - உன்
ஆசைமகன் எழுதும் மடல்
2004-12-09
Abonnieren
Posts (Atom)
