2005-02-07

லண்டனிலே மாப்பிளையாம் பெண்ணு கேக்கிறாங்க

லண்டனிலே மாப்பிளையாம் பெண்ணு கேக்கிறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்


நல்ல நல்ல மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்கிறாங்க
ஆயிரமாய் சீதனத்தை அள்ள நிக்கிறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஏமாறப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
இந்த நாட்டினுள்ளே நரிகள் என்று யாருக்குப் புரியும்


அன்றொருநாள் நடந்ததொரு அவசரக்கலியாணம்
ப்ளேனிலேதான் பறந்துவந்தார் மாப்பிள்ளை டாம்பீகம்
மாப்பிள்ளையும் பெண்ணுமாக வெளியூர் பிரயாணம்
போன ப்ளேனில் திரும்பி வந்தாள் போச்சுது அவள் மானம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்

லண்டனிலே மாப்பிளையாம் பெண்ணு கேக்கிறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க


ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்

எஞ்சினீயர் எண்டு சொல்லிப் புளுகித்தள்ளினாராம்
லண்டனிலோர் ஹோட்டலிலே வெயிட்டர் வேலைதானாம்
கொண்டுபோன காசிலேதான் காரும் வாங்கினாராம்
என்று அந்த பெண்ணும் வந்து சொல்லி அழுதாளாம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்


லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

5 Kommentare:

இராதாகிருஷ்ணன் hat gesagt…

இந்தியாவில்தான் இந்தக்கதை என்றால், ஈழத்திலுமா?! ம்...

dondu(#4800161) hat gesagt…

1954-ல் சோமு அவர்கள் எழுதிய "ரவிச்சந்திரிகா" என்னும் தொடர் கதை கல்கியில் வந்தது. கல்கி இறந்ததும் சோமு அப்பத்திரிகைக்கு ஆசிரியராக சிறிது காலம் இருந்தார். இக்கதையில் பொய் சொல்லிப் பெண் கேட்கும் மாப்பிள்ளைகளைப் பற்றி இப்பாட்டு வந்தது:

திருச்சி சம்பந்தம் அத்தானை
திவானென்னுச் சொன்னாங்க
திருச்சி போய்ப் பார்த்தால் அத்தான்
தீவட்டிப் பிடிக்கக் கண்டேனே!

இலஞ்சிக்குளம் சம்பந்தம் அத்தானை
இஞ்சினியரென்னுச் சொன்னாங்க
இலஞ்சிக்குளம் போய்ப் பார்த்தால்
அத்தான் இட்டிலி விற்கக் கண்டேனே

தாராபுரம் சம்பந்தம் அத்தானை
தாசிதாருன்னுச் சொன்னாங்க
தாராபுரம் போய்ப் பார்த்தால்
அத்தான் தமுக்கடிக்கக் கண்டேனே

கழுகுமலைச் சம்பந்தம் அத்தானை
கலெக்டருன்னுச் சொன்னாங்க
கழுகுமலைப் போய்ப் பார்த்தால்
அத்தான் கழுதை மேய்க்கக் கண்டேனே

அன்புடன்,
டோண்டு ராகவன்

y.umanantha hat gesagt…

hi wel comeeeeeeeeeeee

y.umanantha hat gesagt…

hi akka ungalathu aakkangal eallam arumay,MORRIS ANNA patt supper-a soli irrukerengal 10000 nanrekalll.naanu point pedro thaan ok akka once mor 10000 THANKS

BY
NANTHA

chandravathanaa hat gesagt…

வணக்கம் நந்தா
உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.
முடிந்தால் எனக்கு மெயில் போடுங்கள்.