நான் ஈழகானங்கள் பகுதியில் பதிந்த ஈழத்தவர்களது பாடலான லண்டனிலை மாப்பிள்ளையாம் பாடலைப் படித்து விட்டு ஈழத்திலும் இதுதானா என்று ராதாகிருஷ்ணன் வியந்தார். டோண்டு ராகவன் இந்தியாவில் வெளியான இதற்கு ஒப்பான ஒரு பாடலையே தந்துள்ளார். இப்பாடல் பின்னூட்டதோடு மறக்கடிக்கப் படாது ஒரு பதிவாக இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே பதிகிறேன்.
1954-ல் சோமு அவர்கள் எழுதிய "ரவிச்சந்திரிகா" என்னும் தொடர் கதை கல்கியில் வந்தது. கல்கி இறந்ததும் சோமு அப்பத்திரிகைக்கு ஆசிரியராக சிறிது காலம் இருந்தார். இக்கதையில் பொய் சொல்லிப் பெண் கேட்கும் மாப்பிள்ளைகளைப் பற்றி இப்பாட்டு வந்தது:
திருச்சி சம்பந்தம் அத்தானை
திவானென்னுச் சொன்னாங்க
திருச்சி போய்ப் பார்த்தால் அத்தான்
தீவட்டிப் பிடிக்கக் கண்டேனே!
இலஞ்சிக்குளம் சம்பந்தம் அத்தானை
இஞ்சினியரென்னுச் சொன்னாங்க
இலஞ்சிக்குளம் போய்ப் பார்த்தால்
அத்தான் இட்டிலி விற்கக் கண்டேனே
தாராபுரம் சம்பந்தம் அத்தானை
தாசிதாருன்னுச் சொன்னாங்க
தாராபுரம் போய்ப் பார்த்தால்
அத்தான் தமுக்கடிக்கக் கண்டேனே
கழுகுமலைச் சம்பந்தம் அத்தானை
கலெக்டருன்னுச் சொன்னாங்க
கழுகுமலைப் போய்ப் பார்த்தால்
அத்தான் கழுதை மேய்க்கக் கண்டேனே
அன்புடன்,
டோண்டு ராகவன்
Abonnieren
Kommentare zum Post (Atom)

2 Kommentare:
நன்றி சந்திரவதனா அவர்களே. முடிந்தால் ரவிசந்திரிகாவை அவசியம் படிக்கவும். நான் 8 - 9 வயதில் அதைத் தொடர்க்கதையாகப் படித்தவன். சோமு அவர்கள் தமிழ் என்னை மிகக் கவர்ந்தது. அதன் பாதிப்புகளை இப்போதும் என் எழுத்துக்களில் பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி ராகவன்
ரவிசந்திரிகாவை எப்படியாவது பெற்று படிக்க முயற்சிக்கிறேன்.
நட்புடன்
சந்திரவதனா
Kommentar veröffentlichen