லண்டன் பாரிஸ் கனடா போவோம்
பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் பார்ப்போம்
இத்தாலி யேர்மனி ஒஸ்ரேலியா போவோம்
எங்கள் பிரச்சனை என்னெண்டு பார்ப்போம்
சுதுமலைப் பெடியன் சுதியான மாப்பிளை
சின்னொரு பிரச்சனை தலையிலை மயிரில்லை
சிலுக்குப் பிள்ளை சிவத்தார் பொம்பிளை
சுளையாக் கொடுத்த சீதனம் பத்தலை
பருத்துறைப் பெடியன் Bsc மாப்பிளை
படிச்ச Field இலை அவனுக்கு Job இல்லை
கல்முனைப் பிள்ளை குணமான பொம்பிளை
கேட்டதும் கொடுக்க கொழும்பிலை வீடில்லை
இருபாலைப் பெடியன் Accounten மாப்பிளை
பத்து வருசமா Final முடிக்கலை
இஞ்சத்தே பிள்ளை படிச்சொரு பொம்பிளை
Disco, party யில் Dance ஆடத் தெரியலை
கிளிநொச்சிப் பெடியன் காசோட மாப்பிளை
ஆனால் .......................................................
சிலுக்குஸ்மிதா ஸ்ரைலான பொம்பிளை
Sie doesn`t want any பனங்காட்டு மாப்பிளை
சிட்னிப் பொம்பிளை சில்லாலை மாப்பிளை
ஐயா கதைக்கிற ஆங்கிலம் பத்தலை
கரவைப் பிள்ளை கனடா மாப்பிளை
கொழும்பு புறப்பட Wellfare கிடைக்கலை
இத்தாலி மாப்பிளை ஹொங்ஹொங்கில் பொம்பிளை
.............................. குணமோ சரியில்லை
ஹொலண்டில் பொம்பிளை சுவிசில் மாப்பிளை
இருப்பதெங்கே என்றே தெரியலை
Abonnieren
Kommentare zum Post (Atom)

4 Kommentare:
ithu nakaichsuvaiyaa, sookamaa?
தங்கமணி
புலம் பெயர் தமிழரின் இக்கட்டும் அதனாலான சோகமும் நகைச்சுவையாகச் சொல்லப் பட்டுள்ளது.
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால் இங்கு புலத்தில் முகம் பார்க்காமலே, குணம் தெரியாமலே, ஒரு lotto வாங்குவது போல பெண்ணையோ ஆணையோ அழைத்து வாழ்வைத் தொடஙஇகுவது, எத்துணை றிஸ்கானது என்பது
உங்களுக்கும் விளங்குமென நினைக்கிறென்.
நட்புடன்
சந்திரவவதனா
ithu neenga eluthinatha?
இல்லை சினேகிதி. இதை நான் எழுதவில்லை.
லண்டன் றப் பாடல்கள் அடங்கிய கசற் இல் இருந்தது.
யார் எழுதியது, யார் பாடியது... என்று எதுவுமே தெரியாது
Kommentar veröffentlichen