2005-03-29

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே


கள்ளுக்கடைப் பக்கம் போகாதே - ஒலி வடிவம்

குரல் - நித்தி கனகரத்தினம்

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே
காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்
கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும்
கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்
அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்
விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே
விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா
பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா
பற்றி எரியுதெந்தன் வயிறடா
பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா
கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா
வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும்
உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்
கடன்காரனாக உன்னை மாற்றிடும்
கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்
கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ
கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ
அன்னை சொல்லு கேட்பானென்றால்
ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே.

13 Kommentare:

வசந்தன்(Vasanthan) hat gesagt…

சந்திரவதானா அக்கா!
இந்தக் குறும்புதானே வேண்டாமெண்டிறது. இப்ப கள்ளுக்குடிக்கிறதப் பற்றி சுவாரசியமா பின்னூட்டங்கள் போய்க்கொண்டிருக்கேக்க இப்படி ஒரு பாட்டுத் தேவ தானோ?

காசி (Kasi) hat gesagt…

சந்திரவதானா,


இதன் ஒலிவடிவத்துக்கு தொடுப்பு இருந்தாக் குடுங்க கேட்டு மாமாங்கமாச்சு.

காசி (Kasi) hat gesagt…

சந்திரவதானா,


இதன் ஒலிவடிவத்துக்கு தொடுப்பு இருந்தாக் குடுங்க கேட்டு மாமாங்கமாச்சு.

இராம.கி hat gesagt…

ரொம்ப நாளைக்கு முன் "ஈழத்து பொப்பிசை" என்று இலங்கை வானொலியில் பெரிதும் விரும்பிக் கேட்ட பாட்டு. நினைவு படுத்தினீர்கள். இன்னும் பல பாடல்கள் (உன் சின்ன மாமியே) கொஞ்சமாய் நினைவுக்கு வருகின்றன. இங்கு அவற்றை இடுங்கள். படிப்பதற்கு நன்றாக இருக்கும்.

அன்புடன்,
இராம.கி.

காசி (Kasi) hat gesagt…

சந்திரவதானா,


இதன் ஒலிவடிவத்துக்கு தொடுப்பு இருந்தாக் குடுங்க கேட்டு மாமாங்கமாச்சு.

கறுப்பி hat gesagt…

இது அநியாயம் சந்திரவதனா! கனடாவில் குட்டி யாழ்ப்பாணமே உருவாகிவிட்ட நிலையில் கள்ளு மட்டும் வரவில்லையே என்று ஏங்கி நிற்கின்றோம். விரைவில் வரும் என்று எதிர்பார்க்கும் இந்த வேளை இந்தப்பாட்டைத் தளத்தில் போட்டு தடுத்துவிடுவீர்கள் போல உள்ளதே

அருள் செல்வன் கந்தசுவாமி hat gesagt…

"
சீதனம் சீராக வேண்டுமா
டொனேஷன் அதுவும் வேண்டுமா
சீரான வாழ்வில் தொல்லையோ
சிந்தனை அறிவுமில்லையோ ...
....................."

இந்தப் பாடலும் நினைவுக்கு வருகிறது.
யாருடைய பாடல்? பரமேஷ்-கோனேஷ் என்றெல்லாம் பெயர்கள் கேட்ட நினைவு

villandam hat gesagt…

ஒரு விடயத்தை எதிர்ப்பது போலப் பாவனை பண்ணிக் கொண்டு
அதற்கு விளம்பரம் செய்வது இப்போதைய ஃபாஷன். அது மாதிரியான கள்ளுக்கடை விளம்பரமோ இது.

Chandravathanaa hat gesagt…

வசந்தன், காசி, கறுப்பி, Krishnan, Arul, villandam
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

காசி, கிருஸ்ணன் உங்கள் இருவரதும்வேண்டுதல்களுக்கு இணங்க பொப்பிசையை கூகிள் வழி உலகெலாம் தேடியும் கிடைக்காது மனம் சலித்து
பாட்டைத் தர முடியாது என எழுதுவோம் என முடிவு கட்டிய போதுதான் ஞாபகத்தில் வந்தது இராஜன் முருகவேல் பொப் பாடல்களைச் சேகரிப்பதாக முன்னர் ஒரு முறை யாழ்கருத்துக் களத்தில் அறிவித்தது. தாமதமாகவேனும் வந்த எனது ஞாபகத்தின் பயனாக பாடலை இங்கு தருகிறேன் இராஜன் முருகவேலுக்கு பெரியதொரு நன்றியைச் சொல்லிக் கொண்டு.

அவரது தமிழமுதம் தளத்தில் krishnan கேட்ட சின்ன மாமியே பாடலும் இருக்கிறது.

arul கேட்ட இந்த வரிகள் எந்தப் பாட்டில் என்று ஞாபகம் வரவில்லை. வந்தால் தர முயற்சிக்கிறேன்.

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே"

Chandravathanaa hat gesagt…

அருள் நீங்கள் கேட்ட

சீதனம் சீராக வேண்டுமா

சோழியான் hat gesagt…

http://www.tamilamutham.net/index.php?option=com_jinzora&&ptype=songs&genre=&artist=&album=Ceylon-Tamil-Pop-Songs-Part+1&jinzora-session=9553e7299c2969d4d54b26b9bdafc5bf
மேலுள்ள தொடுப்பிலே பொப்பிசைப் பாடல்கள் சிலவற்றை கேட்கலாம்.
வாழ்த்துக்கள் சந்திரவதனா!!

Chandravathanaa hat gesagt…
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Chandravathanaa hat gesagt…

நன்றி இராஜன் முருகவேல்.
இது மற்றவர்களுக்கும் உதவும்.
பொப் இசைப் பாடல்கள் கேட்டு மகிழ