வரிகள்-சத்தியா
குரல்-சத்தியா
இசை-எஸ்.கே.பஞ்ச்
பாரிஸ் வந்தோம்
பாரில் பள்ளி வந்தோம்
பாடி வந்தோம்
பலதும் சொல்லி வந்தோம்
சொந்த மண்ணில் அகதிகளாய் அழுவதனாலே
சோகங்களே எங்கள் நிலை ஆனதனாலே
கலங்கி வந்தோம்
காதல் பிரிந்து வந்தோம்
கழுவ வந்தோம்
கவலை கழுவ வந்தோம்
வெந்த புண்ணில் வேல் நுழையும் கொடுமை போல
துன்பம் மேலே துன்பம் நம்மைத் தொடர்வதாலே
துவண்டு வந்தோம்
பல தூரம் வந்தோம்
துடைக்க வந்தோம்
...... துடைக்க வந்தோம்
பைந்தமிழின் மீது கொண்ட பாசத்தாலே
பாரில் அதை வளர்க்க எண்ணும் ஆசையாலே
படைக்க வந்தோம்
பலதும் சமைக்க வந்தோம்
பாரிஸ் வந்தோம்
பாரில் பள்ளி வந்தோம்
பாடி வந்தோம்
பலதும் சொல்லி வந்தோம்
2005-04-07
Abonnieren
Kommentare zum Post (Atom)

0 Kommentare:
Kommentar veröffentlichen