2005-09-28

என் இனமே...! என் சனமே...!

என் இனமே...! என் சனமே...!
என்னை உனக்குத் தெரிகிறதா?
எனது குரல் புரிகிறதா?

என் இனமே...! என் சனமே...!

மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா


என் இனமே...! என் சனமே...!

அன்னை தந்தை எனக்குமுண்டு
அன்பு செய்ய உறவும் உண்டு
என்னை நம்பி உயிர்கள் உண்டு
ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்


என் இனமே...! என் சனமே...!

பாசறை நான் புகுந்த இடம்
பதுங்கு குழி உறங்குமிடம்
தேசநலன் எனது கடன்
தேன்தமிழே எனது திடல்

மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்


என் இனமே...! என் சனமே...!

என் முடிவில் விடிவிருக்கும்
எதிரிகளின் அழிவிருக்கும்
சந்ததிகள் சிரித்து நிற்க
சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்


என் இனமே...! என் சனமே...!

11 Kommentare:

Anonym hat gesagt…

இப்பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?

Vaa.Manikandan hat gesagt…

enn oru aaN paaduvathu pola ezuthi uLLiirkaL?

Chandravathanaa hat gesagt…

மணிகண்டன்
உங்கள் வரவுக்கு நன்றி.
உங்கள் கேள்வி நியாயமானதுதான்.
ஒரு ஆணே இப்பாடலை எழுதியுள்ளார். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பிழை.

irumporai hat gesagt…

Naaddu parralar kavijar Naavannan than intha paaddai eluthiyathu

Chandravathanaa hat gesagt…

irumporai
தகவலுக்கு மிகவும் நன்றி

வன்னியன் hat gesagt…

பாடலின் ஒலிவடிவை விரைவில் என் பதிவில் இடுகிறேன்.
பாடியவர் பொன்.சுந்தரலிங்கம் என்று நினைக்கிறேன்.

Chandravathanaa hat gesagt…

நன்றி வன்னியன்.
பொன் சுந்தரலிங்கம் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

மலைநாடான் hat gesagt…

சந்தேகமில்லை. பாடியது பொன்.சுந்தரலிங்கமேதான். ஒரு வானொலிநிகழ்ச்சிக்காக அவரைச் செவ்விகண்டபோது, தனக்குப் பெருமை சேர்த்த பாடல்களில் இது முதன்மையானது என அவரே கூறினார்.
எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல்

வெற்றி hat gesagt…

இந்தப் பாடலைக் கேட்கும் போது கண்களில் நீர் பொங்கிவரும். குறிப்பாக மாவீரர் தினத்தின் போது இந்த மாவீரர்களின் உருவப்படங்களுக்கு முன் அவர்களின் உறவுகள் அழும்போது ...

//
அன்னை தந்தை எனக்குமுண்டு
அன்பு செய்ய உறவும் உண்டு
என்னை நம்பி உயிர்கள் உண்டு
ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு//

மாவீரர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களும் சாதாரண மனிதர்களே. அவர்களுக்கும் எல்லோரையும் போல் உறவுகள், ஆசைகள் உண்டு. அப்படியிருந்தும் எம்மினத்தின் விடுதலைக்காக தமது சுகங்களை எல்லாம் துறந்த தியாகச் செம்மல்கள். தெய்வங்களை விட உயர்ந்து நிற்பவர்கள் இந்த மாந்தருள் மாணிக்கங்கள்.

ENNAR hat gesagt…

நல்ல கவிதை

Chandravathanaa hat gesagt…

மலைநாடான்,
நன்றி.
வானொலி நிகழ்ச்சிக்காக செவ்வி கண்டீர்களா? நீங்கள்...?

வெற்றி

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரியே.
தாயககீதங்களில் பல, கேட்கும் போதெல்லாம் கண்களில் நீர் உகுக்க வைப்பவை.

என்னார்
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி