பாடல் வரிகள் - வைரமுத்து சொர்ணலிங்கம்
பாடியவர் - நடா ஜெயதேவன்
இசை - கிரிதரன் குணரட்ணம்
மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மானந்தான் பெரிதென்று வாழ்ந்திடும்
தேசத்தின் புயலென்று ஓய்ந்திடும்
மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மண்ணோடு…
வாழும் பிள்ளை பாடையிலே போவதோ
நாடும் சுடுகாடு என்றே ஆவதோ
பாழும் விதிதானே என்று எண்ணவோ
வீழும் மக்கள் நெஞ்சங்களில் துஞ்சவோ
அஞ்சி அஞ்சி வாழ்வதுதான் நம் வாழ்க்கையா
மிஞ்சி அவர் துயர் தீர்க்க சேரடா
வெண்பஞ்சும் ஒன்றிணைந்தால் கயிறாகும்
ஒன்றிணைந்தால் எம் வாழ்வும் உயர்வாகும்
மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மண்ணோடு…
தேசம் உந்தன் பாசம் என்று ஆனதோ
வாசம் செய்ய மோசம் வந்து சேர்ந்ததோ
காலம் செய்த கோலம் என்று எண்ணவோ
காலன் செயல் ஈனம் என்று சொல்வதோ
பாவம் ஈழத் தமிழனாகப் பிறந்ததா
வேகும் தணல் மேல் விழுந்த புழுக்களாய்
வெரறுந்த மரமாகிப் போவதேன்
விழுதுடனே தளைத்தோங்கி வாழாமல்
மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மண்ணோடு உன் ஊர்வலம்
நெஞ்சோடு சொல்லும் காவியம்
மண்ணோடு…
Abonnieren
Kommentare zum Post (Atom)

1 Kommentare:
அன்புள்ள சந்திரவதனா,
தொடர்ந்து எனது வலைப்பக்கம் வந்து ஆதரவளித்து வருவதற்கும் பதிவுகளுக்கு இணைப்புக் கொடுப்பதற்கும் நன்றி. ‘விண்ணோடு உன் ஊர்வலம்’என்ற பாடல் பார்த்தேன். அது மிகப் பல ஆண்டுகளுக்கு முன்னர் திரு.வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களால் எழுதப்பட்டது. அவர் கனடாவில் இப்போது ஒரு அற்புதமான பணியைச் செய்து வருகிறார். கர்நாடக சங்கீதம் என்று புரியாத மொழியில் பாடி இசையை ரசிகர்களிடமிருந்து அந்நியப்படுத்தி வருவதற்கு மாற்றாக ‘இசைக்கு ஏது எல்லை’என்று ஒரு நிகழ்ச்சியை நடத்திவருகிறார். பாரம்பரிய கர்நாடக சங்கீதம் என அறியப்பட்டிருக்கும் அதனை, யாவரும் கேட்கும்விதமாக தமிழில் பாட்டெழுத வைத்து பிரபலமான பாடகர்களை வைத்து அந்த நிகழ்ச்சியை நடத்திவருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் இந்தக் கலைநிகழ்ச்சி இடம்பெறும். தமிழில் இசை கேட்கப் பிடிக்கிற தரமான ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு வருவார்கள். சொர்ணலிங்கம் அவர்களால் நிர்வகிக்கப்படும் இசையரங்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட இசைப்பேழையைக் கேட்க வேண்டுமானால் இந்தப் பக்கத்திற்குப் போய்ப் பார்க்கவும். முழுமையாகக் கேட்பதானால் இசைத்தட்டை வாங்கவேண்டும். அதில் ஆறு பாடல்கள் என்னால் எழுதப்பட்டவை என்பதை பெருமைக்காக அல்லாமல் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகக் கூறிவைக்கிறேன்.
hவவி:ஃஃறறற.ளையலையசயபெயஅ.உழஅஃஉன_சநடநயளந.hவஅ
Kommentar veröffentlichen