பாடல் வரிகள்: கவிஞர் முருகையன்
பாடியவர்கள்: எஸ்.கே பரா+கோகிலா சிவராஜா
இசை: எம்.கே.ரொக்சாமி
கங்கையாளே... கங்கையாளே...
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!
நுவரெலியா முதலான உயரமலை
பயிலும் கங்கையாளே...!
தவறாத வளமுடைய....
தன்மை பொழியும் எங்கள் கங்கையாளே...!
கங்கையாளே... கங்கையாளே......
கந்தளாயும்....மூதூரும்....
காத்து வரவேற்கின்ற கங்கையாளே....
வந்து சேர்வாய் திருமலைக்கே..
மாகடலில் போயிறங்கும் கங்கையாளே...!
கங்கையாளே... கங்கையாளே...
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!
2009-06-29
கங்கையாளே... கங்கையாளே...
Labels:
இ. முருகையன்,
எம். கே. ரொக்சாமி,
எஸ். கே பரா,
கங்கையாளே,
கோகிலா சிவராஜா
Abonnieren
Kommentare zum Post (Atom)

0 Kommentare:
Kommentar veröffentlichen